சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தினை கதையை இயக்குனருடன் இணைந்து மிஸ்கின், நீலன் கே சேகர் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து எழுதியுள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார்.

பல கிளைக்கதைகள் கிளைமாக்சில் ஒரு இடத்தில் இணைவது போன்றா, அல்லது தனி தனி ஷார்ட் பிலிம் பாணியா என்று இப்படத்தின் மீது பலத்த ஆர்வம் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் தணிக்கை குழு எந்த வித கத்தரிப்பும் இல்லாமல் A சான்றிதழ் கொடுத்துள்ளனராம். மேலும் இப்படத்தின் ஓடும் நேரம் 2 மணிநேரம் 56 நிமிடங்களாம். (175 . 47 )

