சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நடித்தது இந்த அழகிதான்.. டார்ச்சர் தாங்காமல் பாதியில் எஸ்கேப்

ஆரண்யா காண்டம் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்திலேயே சிறந்த கதைக்களம் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்து ஒரு சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

இதனை தொடர்ந்து இவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் இவர் ஒரு படம் வெற்றி பெற்ற உடனே ஆர்வக்கோளாறில் அடுத்த படத்தை இயக்கவில்லை. சிலகாலம் இடைவெளி எடுத்து கொண்டு மிகவும் பொறுமையாக அடுத்த கதையை தேர்வு செய்தார்.

அந்த படம் தான் சூப்பர் டீலக்ஸ். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்களையும் இறுதியில் ஒன்றாக இணைக்கும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இந்த படத்தில் வேறு எந்த முன்னணி நடிகரும் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தவிர இந்த படத்தில் சமந்தா, பகத் பாசில், காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் இந்த கேரக்டருக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன் இல்லையாம். முதலில் இந்த கேரக்டருக்காக நடிகை நதியா தான் ஒப்பந்தமாகி உள்ளார்.

அதன்படி ஒரு நாள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டாராம். படப்பிடிப்பில் நடந்த டார்ச்சர் தாங்க முடியாமல் நதியா இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகி விட்டாராம். அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News