Videos | வீடியோக்கள்
“டொக்கு வைச்ச .. மொக்க ப்ளேயர்.. டக்கு பௌலர்..” ! வைரலாகுது சி எஸ் கே பாய்ஸின் ராப் சாங் வீடியோ.
ஐபில் சீசனைகள் வரும் போகும் சி எஸ் கே வின் க்ளாஸ் மட்டுமே நிரந்தரம் என்றால் அது மிகையாகாது. சென்ற வருடம் கம் பேக் கொடுத்த பொழுது முதியோர் கிரிக்கெட் என ஆரம்பித்து கப் ஜெயித்து, மீண்டும் இம்முறையும் கலக்கி வருகின்றனர். 40 வயதில் பர்பில் கேப்புக்கு போட்டியிடும் தாஹிர் ஆகட்டும், ஒபெனிங்கில் இறங்கும் வாட்சன், கடைசி ஓவர் வீசும் பிராவோ, வயதானாலும் கெத்தாக விக்கெட் கீப்பிங் பண்ணும் தோனி என அனைத்தும் ஸ்பெஷல் தான்.
கேம், ப்ராக்டிஸ் ஒரு புறம் என்றால் மறுபுறம் பிறந்தநாள் கொண்டாட்டம், குடும்ப உறுப்பினர்களுடன் குதூகலம், விளம்பரங்கள் நடிப்பது, டீம் பில்டிங் என அசத்துவது இந்த டீம் நிர்வாகம் ஸ்டைல்.
ஏற்கனவே வேஷ்டி, சிலம்பம் என அசத்தினார். தற்பொழுது அந்த வகையில் இவர்களின் சூப்பர் சாலஞ் 2 வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இம்முறை ராப் சங்கில் அசத்துகின்றனர்.
டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன், விஜய் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கலக்கியுள்ளனர்.
