TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி.. மண்ணைக் கவ்விய விஜய் டிவி.. காணாமல் போன ஜீ தமிழ்

சினிமாவில் எப்படி விஜய், அஜித், ரஜினி போன்றோர் முதலிடம் பிடிக்க போட்டி போடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றோர் டிஆர்பியில் முதலிடத்தை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர்.

ஆனால் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது என்னமோ சன் டிவிதான். விஜய் டிவி என்ன தான் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள் பண்ணினாலும் அந்த வார இறுதியில் ஏதாவது ஒரு விதத்தில் சன் டிவி முன்னிலைக்கு வந்துவிடுகிறது.

கடந்த சில வருடங்களாக சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி சேனல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் ஜீதமிழ் முன்னேறி வந்தது. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதுவும் செம்பருத்தி சீரியலுக்கு உள்ள தாய்மார்களின் வரவேற்பு முன்னணி நடிகர்களின் படத்திற்கு கூட கிடையாது.

இந்நிலையில் பொங்கல் ரேஸில் அனைத்து சேனல்களும் போட்டி போட்டது. ஒருபக்கம் விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற நிறுவனங்கள் ரியாலிட்டி ஷோக்கள் தயாரித்து வெளியிட்டன. ஆனால் சன் டிவி சிம்பிளாக அனைத்து சேனல்களையும் வச்சு செய்துவிட்டது.

புதிய புதிய படங்களை திரையிட்டு தமிழக மக்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்து டிஆர்பியில் மாஸ் காட்டி முதலிடத்தை பிடித்து விட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி மற்றும் ஜீதமிழ் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

tamil-tv-channels
tamil-tv-channels

என்னதான் மற்ற சேனல்கள் விதவிதமாக நிகழ்ச்சிகள் செய்தாலும் சன் டிவி எப்படித்தான் முதலிடத்தை பிடிக்கிறது என்பது அவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்