புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிஆர்பிகாக போட்டி போடும் விஜய் டிவி, சன் டிவி.. முதலிடத்தில் பிடிக்கப் போகும் பிரபல சேனல்

சின்னத்திரையில் போட்டியான இரு சேனல்கள் என்றால் அவை சன் டிவியும் விஜய் டிவியும் தான். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மாறி மாறி காப்பி செய்யப்பட்டாலும் சீரியலில் இரு சேனல்களும் அவர்தம் தனித்துவத்தை காட்டும்.

எப்போதும் சிகரத்தில் இருக்கும் சன் டி.வி யின் சீரியல்கள். இப்போது மக்கள் மத்தியில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த முறை டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டி.வியின் ரோஜா மற்ற எல்லா சீரியல்களையும் துவம்சம் செய்தது. கோவிட் பிரச்சனை காரனமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த சீரியல்கள் இப்போது மீண்டும் புதப்பொலிவுகளுடன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன.

roja-serial-cinemapettai

இப்போதய நிலையில் சன் டிவியின் சீரியல்களை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் முதல் இரண்டாம் இடங்களை பெறுகின்றன விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி.

தொடர்ந்து முனனிலை வகித்து வந்த சன் டிவியின் ரோஜா இப்போது நான்காம் இடத்தை பிடித்துள்ளது. பூவே உனக்காக மூண்றாமிடம் பிடித்து சன் டிவியில் முதலிடம் வகிக்கிறது.

ஐந்தாம் இடத்தை ஆக்ரமித்தது வானத்தைப்போல. இப்படியாக மக்கள் மனதில் ஏற்பட்ட சில மாற்றங்களால் மாறியது வரிசைத்தட்டு.

- Advertisement -

Trending News