Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் டிவியை முடிச்சு கட்ட முடிவெடுத்த சன் டிவி.. TRP-யில் தகதிமிதா என திண்டாட்டம்
எப்படி முன்னணி நடிகர்களின் படங்கள் வசூல் ரீதியாக யார் பெரியவர் என அடித்து கொள்கிறார்களோ அதே போல்தான் சின்னத்திரையிலும் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் இந்த போட்டியில் சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியோரிடையில் தான் பலத்த போட்டி நிலவும்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி விருந்தினர் போல் வந்து எட்டிப் பார்த்து விட்டு செல்வார்கள். ஆனால் எப்போதும் நம்பர் ஒன் சன் டிவிதான்.
கடந்த வாரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரோஜா சீரியல் முதல் இடத்தையும், கொம்பன் படம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. மூன்றாவது இடமும் சன் டிவிக்கு தான்.
மேற்கொண்டு நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
விஜய் டிவி பெரிதும் நம்பியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி TRP-யில் காலை வாரியதால் மற்ற சேனல்களுடன் போட்டிபோட முடியாமல் தடுமாறி வருகிறது.
எனினும் விஜய் டிவி தற்போது குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியை பெரும் நம்பிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
