சன் நிறுவனத்தின் கையில் 5 முன்னணி நடிகர்களின் குடுமி.. தமிழ் சினிமாவை அடிமையாக்குகிறதா சன் பிக்சர்ஸ்?

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை கார்ப்பரேட் கம்பெனிகள் எதுவும் கையில் எடுத்துக் கொள்ளாமல் தனித்தனியே நம்பிக்கை தன்மையுடன் பல தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் தமிழ் சினிமாவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு விட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சமீபகாலமாக நடிகர்கள் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதுவும் ஒரே நேரத்தில். சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த, விஜய்யை வைத்து தளபதி 65, சூர்யாவை வைத்து சூர்யா 40, விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் படம், தனுஷை வைத்து D44 போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

sunpictures-upcoming-movies
sunpictures-upcoming-movies

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர்கள் இவர்கள்தான். இவர்களை தொடர்ந்து தல அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

மொத்தமாக தமிழ் சினிமாவே கொஞ்சம் கொஞ்சமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடிமையாகி கொண்டிருப்பதை கண்முன்னால் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் நடிகர்களின் பேராசையா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சியா? என்பது புரியாமல் கோலிவுட் வட்டாரமே திகைத்துப் போயுள்ளது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் சன் பிக்சர்ஸ் நினைத்தால் எவ்வளவு பெரிய நடிகரையும் தங்களுடைய நிறுவனத்திற்கு கீழ் அடிமையாக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறது. இதை புரிந்து கொண்டு தமிழ் நடிகர்கள் வெளி தயாரிப்புகளில் நடிப்பார்களா, அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து அடிபணிவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதுகுறித்து ரசிகர்களின் கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்