டாக்டர் ராஜசேகர் நடிப்பில் உருவான ‘பிஎஸ்வி கருட வேகா 126.18எம்’ படம் நவம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

டாக்டர் ராஜசேகர் & பூஜாகுமார் இணைந்து தெலுங்கில் நடித்துள்ள படம் ‘பிஸ்வி கருடவேகா 126.18எம்’ இந்தப் படத்தில் கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சஞ்சய் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஸ்ரீசரன் பகலா இசையமைத்துள்ளார். பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

படத்தில் டாக்டர் ராஜசேகர் என்.ஐ.ஏ பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது உயர் அதிகாரியாக நாசர் நடித்துள்ளார், ஸ்ரத்தா நிருபராக நடித்துள்ளர். சாயாஜி ஷிண்டே அமைச்சராகவும், கிஷோர் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

sunny

இந்தியா விண்ணில் ஏவ இருக்கும் ராக்கெட் ஒன்றை சில வெளிநாட்டு சக்திகள், உள்ளூர் சக்திகளின் உதவியோடு தகர்க்க திட்டமிடுவதும் அந்த திட்டத்தை ராஜசேகர் முறியடிப்பதுமான கதை. டாக்டர் ராஜசேகர் நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள படம் இது. இந்தப் படம் வருகிற நவம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அதிலும் அவரது ‘என்ன கொடுமை சரவணன் இது’ பலரும் இன்றுவரை பயன்படுத்தும் வசனமாக இருக்கிறது.

Premji

இந்த நிலையில் இவர் தன்னைப் பார்த்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் காப்பி அடித்துவிட்டதாக கூறியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் ‘பி.எஸ்.வி கருடவேகா’ படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இந்தப் படத்தில் வரும் பாடல் காட்சியில் சன்னி லியோன் பிரேம்ஜி மேனரிசத்தில் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார்.

premgi

அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பிரேம்ஜி தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து இது தன்னுடைய மேனரிசம் என குறிப்பிட்டுள்ளார்.