மும்பை: சினிமாவில் நடிக்க தனது வாழ்க்கையே பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக விளங்கி வருபவர் சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், முன்னதாக ஆபாச படங்களில் நடித்து வந்தார். பின்னர் அதிலிருந்து வெளியேறி, பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதிலும் கவர்ச்சி கதாபாத்திரமே வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். நிஜ வாழ்வில் நிறைய தோல்விகளை சந்தித்து விட்டதால், பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நான் தனி ஒருவன் தான் - போலீசாக ஜெயம் ரவி மிரட்டும் அடங்கமறு ட்ரைலர் !

நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக தயாரிப்பாளர் ஒருவருடன் படுக்கையை கூட பகிரும் நிலைக்கு வற்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். முதல் வெளிப்படையாக நடிக்க கூச்சம் ஏற்பட்டதாகவும், தற்போது அவை காணாமல் போய்விட்டதாகவும் நடிகை சன்னி லியோன் வேதனையுடன் கூறினார்.