சமீப காலமாக தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் அதே வேலையில் தோனிக்கான ஆதரவும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஐ.பி.எல் பத்தாவது சீசன் நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே புனே அணி சர்ச்சை பட்டியல் துவங்கியது. முதலில் கேப்டன் தோனியின் நீக்கம்.

பின் புனே அணியின் ஹர்ஸ் கோயின்கா தோனியை இழிவுபடுத்தும் விதமான சர்ச்சை ட்வீட்டர் பதிவுகள்.

தொடர்ந்து தோனியின் மோசமான பார்ம் என அடுத்ததடுத்து இந்த பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உள்பட சிலர் தோனி மீதான விமர்சனங்களை முன்வைத்து வருவதால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் நபராக தோனி மாறியுள்ளார்.

இப்படி ஒருபக்கம் தோனிக்கு எதிர்ப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும் மறுபக்கம் ஆதரவும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தோனியின் ஆதரவாளர்கள் என்ற லிஸ்டில் கவர்ச்சி புகழ் சன்னி லியோனும் இணைந்துள்ளார்.

@GaneshK2410 favorite team is obviously india and player – Dhoni #AskSunny

— Sunny Leone (@SunnyLeone) October 4, 2016

சன்னி லியோனின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் விரும்பும் கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் வீரர் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார், இதற்கு பதிலளித்த சன்னி லியோன் தனக்கு பிடித்த அணி இந்தியா தான் என்றும் தனக்கு பிடித்த வீரர் தோனி என்றும் தெரிவித்துள்ளார்.