Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெப் சீரியஸில் சன்னி லியோன்! அதுவும் அந்த ரோலில்.. அதுக்கு சரிபட்டு வருவாரா!
மும்பை: நடிகை சன்னி லியோன், காமெடி வெப்சீரிஸில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். பல அந்தப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன். இப்போது அந்த படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர், தமிழில் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடம் ஆடியிருக்கிறார். வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலம் என்றால்அது சன்னி லியோன்,. தெலுங்கு, கன்னடம், மலையாளம். இந்தி , தமிழ், வங்காளம் என இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் மொழி பேதமே இல்லாமல் தேடப்படும் நம்பர் ஒன் பிரபலம் என்றால் அது சன்னிலியோன் தான். இந்நிலையில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் சன்னி லியோன்.
இது காமெடி தொடர், இதுபற்றி சன்னி லியோன் கூறுகையில், ‘இந்த தொடர் பற்றி நான் அதிகம் பேச முடியாது. ஆனால், இதில் பங்கேற்க இருப்பதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். காமெடி எனக்கு எப்போதும் பிடிக்கும். மற்றவர்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் செயலை செய்து நல்ல விஷயம்’ என்று கூறியுள்ளார். ஆனால் சன்னி லியோனுக்கு காமெடி சரியாக வருமா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
இந்தத் தொடரில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் தனக்கான சம்பளத்தை மும்பையில் உள்ள செயின்ட் கேத்தரின்ஸ் அனாதை இல்லத்துக்கு கொடுக்க உள்ளாராம் சன்னி லியோன். என்ன ஒரு உயர்ந்த முடிவு.
