சன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க

பொதுவாகவே இப்போது ரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் ரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம் அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் ரசிகர் மன்றம் தொடங்கினார்கள்.

ஆனால் இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று பாலிவுட் நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கோடி கணக்கில் அதிகரித்து விட்டது.

சன்னி லியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அதைத் தவிர சன்னி லியோனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள துத்திக்குளம் என்ற ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ரசிகர் மன்றத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம். இதைத் தொடர்ந்து இன்னும் பல ஊர்களில் ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். “எது நடக்க கூடாதோ அது நன்றாகவே நடக்கிறது” என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Comments

comments

More Cinema News: