கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளிகரஞ்சீத் கவுர் வோஹ்ரா அதாவது சன்னி லியோன். இவர் ஆபாச பட நடிகை. உலகிலேயே கூகிளில் அதிகம் தேடப்பெற்ற நடிகை என்ற பெருமை கொண்டவர். அன்றும், இன்றும், என்றும் இவரின் விடியோக்களுக்கு கிராக்கி அதிகம்

இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் இவருக்கு கிடைத்தை வரவேற்பை வைத்து 2012 இல் பாலிவுட் படமான மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 ஆம் பாகத்தில் நடித்தார். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.

Sunny leone super man photo
Sunny leone 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். இவர் பொது சேவை, சமூக நலன் உட்பட சில விஷயங்களையும் செய்து வருகிறார். தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதம் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை சன்னி லியோன் தத்து எடுத்துள்ளார். அந்த குழந்தையை தனது வீட்டில் வைத்து வளர்த்தும் வருகிறார். இக்குழந்தையின் போட்டோ மற்றும் அதன் வளர்ப்பு  என்று இன்ஸ்டாக்ராம்மில் போட்டோ வெளியிட்டு வந்தார்.

குழந்தையை தத்து எடுத்தது ஏன்? என்று பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்..

“எனக்கு குழந்தைகள் மீது அலாதி பிரியம் உண்டு. இதனால் அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவேன். மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு எனது கணவர் டேனியலை அழைத்துச் சென்று இருந்தேன்.

அப்போது ஒரு குழந்தையை தத்து எடுக்க எனக்கு ஆசை ஏற்பட்டது. எனது விருப்பத்தை கணவர் ஏற்பாரா? என்ற தயக்கத்தோடு அவரிடம் தெரிவித்தேன். கணவர் உடனே ஒப்புக்கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த இல்லத்தில் இருந்த நிஷா என்ற குழந்தையை தத்து எடுத்தேன்.

எனது வீட்டில் குழந்தை மகிழ்ச்சியாக வளர்கிறது. நிஷா பெரிய பெண்ணாக வளர்ந்ததும் அவள் தத்து குழந்தை என்ற உண்மையை தெரிவிப்பேன். அவளை ஒன்பது மாதம் சுமந்தவல் தான் தாய், நான் உண்மையான தாய் இல்லை என்பதையும் சொல்வேன். நிஷாவை தத்து எடுத்த பிறகு அவளுடைய உண்மையான தாயாகவே நான் மாறி விட்டேன்.

என வாழ்வில் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு நிஷா. அவள் அவ்வளவு அழகு. ஆஸ்ரமத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்து இந்த புது வாழ்க்கைக்கு நன்றாக அட்ஜஸ்ட் ஆகிவிட்டாள்.” என்றும் கூறியுள்ளார்