News | செய்திகள்
சன்னி வாங்கிய புதிய வெளிநாட்டு கார்! விலை எவ்வளவு தெரியுமா?
கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் இங்கு யாரும் இருக்க முடியாது. முதலில் பலான படங்களில் வெளிநாடுகளில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு முறை இந்தியாவிற்கு வருகையில் பெரும் கலாசார எதிர்ப்பை சந்தித்தார்.
அதன் பின்னணியாக அந்த எதிர்ப்பையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தன்னை மக்களிடம் பிரபலமாக்கி கொண்டார். தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தவர் தற்போது கவர்ச்சியின் முக்கிய அங்கமாக பல மொழித்திரைப்படங்களிலும் கால் பதித்து வருகிறார்.

sunny
சினிமா தவிர்த்து விளம்பரங்கள், விழாக்களில் நடனமாடுதல், செக்ஸ் பொருட்கள் வியாபாரம் என்று அம்மணி படு பிசியாக சம்பாதித்து வருகிறார்.
ஒரு பாடலுக்கு நடனமாட பல கோடிகள் சம்பளமாக வாங்கிவரும் சன்னி ஒரு கார் பிரியர். பல புது மாடல் கார்களை வாங்கும் பழக்கம் கொண்ட இவர் தற்போது Maserati Ghibli Nerissimo என்னும் உயர் ரக வெளிநாட்டு காரை வாங்கியுள்ளார். இன்னும் இந்திய சந்தைகளில் விற்பனைக்கே வராத கார் இது. இருப்பினும் இதை வெளிநாட்டில் வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்திருக்கிறார் சன்னி.

sunny
அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே முப்பத்தியாறு லட்சம் ரூபாய் மதிப்புடையது. அமெரிக்க மதிப்பில் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புடையது.
Nerissimo என்றால் இத்தாலிய மொழியில் ‘முழுமையான கருப்பு’ என்று பொருள். இது சன்னியின் இரண்டாவது Maserati காராகும். இதற்கு முன்பே சன்னியின் கணவரான டேனியல் வெப்பர் Quattroporte என்ற Maserati கார் மாடலை பரிசளித்துள்ளார்.

car
பி.எம்.டபிள்யூ காரை வைத்திருந்த சன்னி தற்போது Nerissimo காரில் வலம் வர தயாராகிவிட்டார். இந்த காருடன் சாய்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்றினை சன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கூடுதல் செய்தியாக சன்னி தனது வளர்ப்பு மகளான நிஷா மற்றும் கணவர் டேனியல் வெப்பருடன் தற்போது டிஸ்னி லாந்தில் மகளின் இரண்டாவது பிறந்தநாளை அமர்களமாக அரிசோனாவில் கொண்டாடி வருகிறார். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சன்னி.
Super Cute Nisha Kaur Weber celebrates her 2nd birthday with mom @SunnyLeone and Dad @DanielWeber99 in Arizona pic.twitter.com/XBKg3bTQ3I
— B4U (@THEOFFICIALB4U) October 11, 2017
நிஷாவுடன் நேரத்தை செலவிடுவது தனக்கும் தனது கணவர் டேனியலுக்கும் மிகவும் விருப்பமான ஒன்று என்று சன்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ள சன்னி தனது கணவர் மற்றும் நிஷா மட்டுமல்லாது தனது சகோதரர்கள், டேனியலின் பெற்றோர்கள் என ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டிக்கொண்டு சுற்றுலாவில் சுற்றிவருகிறார்.
மகராஷ்டிராவில் உள்ள லாத்தூர் என்னும் ஊரில் இந்த குழந்தையை அனாதை இல்லத்திலிருந்து சன்னி தத்தெடுத்து வளர்ப்பது குறிப்பிடத்தக்கது.
