இந்திய வம்சாவளியை சார்ந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையில்லை. கவர்ச்சி கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கப்பட்டுவந்த இவர் தற்போது கண்கள் கலங்க வைக்கும் நற்செயலை செய்துள்ளார்….

சன்னி லியோனும் அவரது கணவர் வெப்பர் அவர்களும் கடந்த செவ்வாய் அன்று ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதை பற்றி மனம் திறந்து பேசியுள்ளனர்.

லதூர் என்னும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஊரிலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்கு நிஷா கவுர் வெப்பர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அக்குழந்தைக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. சன்னியும் அவரது கணவரும் இந்த குழந்தையோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் சில நாட்களுக்கு முன்பே இணையத்தில் வெளிவந்தது, இருப்பினும் சன்னி தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால் தற்போது அக்குழந்தையை தத்தெடுத்திருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுபற்றி சன்னி லியோன் கூறுகையில் “நிஷா மிகுந்த அழகுடையவள், அவள் உங்களை பார்த்து சிரித்தாள் என்றால் உங்கள் இதயம் உடனே கரைந்துவிடும். அவளை நான் சுதந்திரமான பெண்ணாக வளர்க்க விரும்புகிறேன்” என்றார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பெற்றால் தான் பிள்ளையா?