நாட்ல தண்ணி பிரச்சனையோட பெரிய பிரச்சனையா இருக்கு சன்னி லியோன் பிரச்சனை.

அந்த அளவுக்கு அம்மணி எது பண்ணாலும் அது பெரிய பிரச்சனையா மாறிருது. சமீபத்துல அவுங்க மேல மக்கள் கடும் கோவத்துல இருக்காங்க ஏன்னு பாப்போம் வாங்க.

சன்னி லியோன் சினிமா மட்டுமில்லாமல் விளம்பரப்படங்கள்லையும் நடிக்குறாங்க. Man Force என்ற காண்டம் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் இவர்தான்.

சிலவருடங்களாய் அந்த நிறுவனத்தின் விளம்பர வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களில் சன்னி வந்துகொண்டு இருக்கிறார். தற்போது பிரச்சனை என்னவென்றால் Man force நிறுவனம் குஜராத் வீதிகளில் வைத்திருக்கும் விளம்பரப் பலகைகல்தான்.

அந்த பலகைகளில் சன்னி புகைப்படத்துடன் கூடிய ஒரு குஜராத்தி மொழி வாசகம் உள்ளது, அதன் அர்த்தம் என்னவென்றால் ‘இந்த நவராத்திரியில் விளையாடுங்கள்! ஆனால் காதலுடன் விளையாடுங்கள்’.

இது போதாதா நவராத்திரியை இரட்டை அர்த்தத்தில் விளம்பரப்பலகையில் எழுதி அவமானப்படுத்திவிட்டார்கள் என்று அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாது சன்னி ஒழிக ஒழிக என்று போர்டுகளை கையில் பிடித்தவண்ணம் குஜராத் வீதிகளில் ஊர்வலம் வர ஆரம்பித்துவிட்டார்கள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: போர்டு புடிக்கிற முக்காவாசி பேரு சன்னி லியோன் படத்தை முதல் நாள் பார்க்குற பயலுகதான்.