இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே பரிட்சயமான கவர்ச்சி புயல்தான் சன்னி லியோன். இந்தியாவில் இவர் முதன் முறையாக வந்த பொழுது ஏற்பட்ட சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையெல்லாம் கடந்து அனைத்து மொழிகளிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை சிறைபிடித்து வருகிறார் சன்னி.

sunny leone
sunny leone

ஹிந்தி சினி உலகம்தான் இவருக்கு முழு வரவேற்ப்பை அளித்து ஆதரவு கரம் நீட்டியது. அங்கு வருடத்திற்கு இரண்டு படங்களாவது கட்டாயம் சன்னி நடித்து வெளிவந்துவிடும். பிற மொழிகளில் வெறும் குத்தாட்டம் மட்டுமே போட்டு வருகிறார்.

தமிழிலும் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் சன்னி. ஆனால் முழுநீள படத்தில் நடித்ததில்லை. இந்த குறையை போக்க விரைவில் சன்னி ஹீரோயினாக நடித்து ஒரு படம் தமிழில் வெளிவரவுள்ளது.

sunny leone
sunny leone

இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் வரலாற்று படம் ஒன்றில் சன்னி நடிக்கப்போவதை செய்தி வெளியாகியுள்ளது. ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இந்த படத்திற்கு இதுவரை தலைப்பு ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

இன்னும் இரண்டு மாதங்களில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், அதற்காக தற்போதே சன்னி குதிரையேற்றம், வாள்பயிற்சி, வில்பயிற்சி போன்றவற்றை ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சன்னிக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆந்திராவிலிருந்து மும்பைக்கு இரண்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள் சென்று பயிற்சியளித்து வருகின்றனராம். மொத்தம் 150 நாட்கள் கால்ஷீட் அளித்துள்ளாராம் சன்னி.

Sunny leone
Sunny leone

இதுகுறித்து சன்னி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியுட்டுள்ளார். அதில் வரலாற்றுப்பாடத்தில் நடிப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அதுவும் தனக்கு மிகவும் விருப்பமான வாள்சண்டையை தானே செய்யப்போவது சுவாரஸ்யமாகவும் இருக்கப்போவதாய் சொல்லியுள்ளார். மேலும் முழுநீள தென்னக சினிமாவில் முதன் முறையாக நடிக்கவிருப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாய் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாம். இந்த அறிவிப்பால் சன்னி லியோனின் தீவிர ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் 70 நிமிடங்கள் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளாக மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளதாம். நாசர், நவ்தீப் போன்றோர் நடிக்குள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது படத்தின் ப்ரீ புரோடக்சன் வேலைகள் துவங்கிவிட்டதாம். இந்த படம் சன்னியின் உண்மையான நடிப்புத்திறமையை பலருக்கு உணர்த்தும் என்று சன்னி ஆதரவாளர்கள் தங்களது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துவருகின்றனர்.

Sunny leone
Sunny leone

கொசுறு: வடிவுடையான் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த படங்கள் சாமிடா, தம்பி வேட்டோத்தி சுந்தரம், சௌகார்ப்பேட்டை, போட்டு, கன்னியும் காளையும் செம காதல்.