இன்றைய இளைஞர்களின் இரவு தூக்கம் பறிக்கும் நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர் அப்படிப்பட்ட சன்னி லியோன் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார்.

சன்னி படபிடிப்பு வேலையாக தனது கணவர் மற்றும் குழுவுடன் தனி விமானத்தில் மகாராஷ்டிராவில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகப் பார்த்தது. விமானிகளின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சன்னி அதிர்ஷ்டவசமான உயிர் பிழைத்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட சன்னி ரசிகர்கள் ஆண்டவே இருக்கா லியோன் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்கிறார்களாம்.