கனடா நாட்டில் ஆபாச படத்தில் நடித்து வந்தவர் நடிகை சன்னி லியோன் இவர் தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், அது மட்டும் இல்லாமல் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு நடித்துவருகிறார்.

sunny leone
sunny leone

குறிப்பாக பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். இவர் பொது சேவை, சமூக நலன் உட்பட சில விஷயங்களையும் செய்து வருகிறார். தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதம் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை சன்னி லியோன் தத்து எடுத்துள்ளார். அந்த குழந்தையை தனது வீட்டில் வைத்து வளர்த்தும் வருகிறார். இக்குழந்தையின் போட்டோ மற்றும் அதன் வளர்ப்பு என்று இன்ஸ்டாக்ராம்மில் போட்டோ வெளியிட்டு வந்தார்.

sunny
sunny

இந்தநிலையில் சன்னியின் கணவர் டேனியல் வெபருக்கு இரட்டை ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த இரட்டை குழந்தை வாடகை தாயின் மூலம் பிறந்தது குறிப்பிடத்தக்கது. இதை டேனியல் வெபர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த குழந்தைகளுக்கு நோவாசிங் வெபர் மற்றும் அஷேர் சிங் வெபர் என்று பெயர் வைத்துள்ளார்..

இரட்டை குழந்தைகளுடன் தத்தெடுத்த பெண் குழந்தையுடன் போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.