புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சுனிதா பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. 35 நாட்களுக்கு இவ்வளவு லட்சங்களா.?

Bigg Boss Season 8 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6 வையல் கார்டு என்ட்ரி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

இதில் சுனிதா, ரஞ்சித், ஜாக்லின், பவித்ரா, அருண் பிரசாந்த், சாச்சனா, விஷால், ரஞ்சித், அன்சிகா, தீபக், முத்துக்குமரன் மற்றும் ஆர் ஜே ஆனந்தி என 11 பேர் நாமினேட் லிஸ்டில் இருந்தனர். இதில் எதிர்பார்க்காத வண்ணம் சுனிதா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனது நடன திறமையை வெளிப்படுத்தியவர் தான் சுனிதா. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுனிதா வாங்கிய சம்பளம்

குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வந்தார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கலந்து கொண்ட போதும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். சில காரணங்களினால் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்து வாக்குகள் பெற்று வெளியேறியிருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 35 நாட்கள் சுனிதா பயணித்திருக்கிறார். ஒரு நாளைக்கு அவருக்கு 25 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிட்டதட்ட 8 லட்சத்து 75 ஆயிரம் வரை சம்பளம் பெற்று இருக்கிறார். ஆனால் இன்னும் சில நாட்கள் சுனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் விரும்பி உள்ளனர்.

மேலும் இனிவரும் நாட்களில் பிக் பாஸில் மிக கடுமையான டாஸ்க்கள் கொடுக்கப்பட உள்ளது. போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பிக் பாஸ் இப்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

- Advertisement -

Trending News