fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அடங்க மறுத்ததால் அவரை மட்டும் மறைமுகமாக பழிவாங்கும் விராட் கோலி.! உண்மையை உடைத்த கவாஸ்கர்

sunil-virat

Sports | விளையாட்டு

அடங்க மறுத்ததால் அவரை மட்டும் மறைமுகமாக பழிவாங்கும் விராட் கோலி.! உண்மையை உடைத்த கவாஸ்கர்

இந்திய ஒருநாள் மற்றும் T20 ஓவர் போட்டிகளில் ஸ்பின் பவுலர்கள் யூனிட்டில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் மட்டும் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய அணியில் தற்போது டெஸ்ட் பவுலராக மட்டுமே அஸ்வின் இருந்து வருகிறார். அவருக்கு மற்ற போட்டிகளில் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் மேலும் அவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட.

ஆனாலும் இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இல்லை, தொடர்ந்து இவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது .

இந்திய அணியில் அஸ்வின் மிகவும் நேர்மையான வீரர், தனது கருத்துகளை அதிரடியாக பேசுபவர். யாருக்கும் இவர் அடிபணிவதும் இல்லை, அடங்கிப் போவதும் இல்லை. இதனால்தான் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர் தெரிவிக்கிறார்.

Ashwin-Cinemapettai.jpg

Ashwin-Cinemapettai.jpg

அஸ்வின் ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்பு பறிக்கப்படுகிறது என கவாஸ்கர் கூறுகிறார். இந்திய அணியில் பாரபட்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. விராட் கோலி தனக்கு பிடிக்காத வீரர்களை மறைமுகமாக பழிவாங்குகிறார் என அனைவரும் தெரிவிக்கின்றனர்.

இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வின் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட கோலியின் கோபம் தான் காரணம் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top