Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் சுந்தர் சி படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதான்.! வைரலாகும் புகைப்படம்.!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர்களில் ஒருவர் இவர் எதார்த்தமாக பேசும் அனைத்து விஷயங்களும் சர்ச்சையில் தான் முடியும், ஆனால் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க தொடங்கியதிலிருந்து எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார்.

simbu
மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் முடிந்த நிலையில் சிம்பு தற்போது சுந்தர்சி படத்திலும் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த நிலையில் சுந்தர் சி படத்தில் நடிக்கும் சிம்புவின் கெட்டப் தற்போது வைரலாகி வருகிறது.
சிம்பு முதல் முதலாக சுந்தர் சி யுடன் கைகோர்த்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

simbu
மேலும் படப்பிடிப்பின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் தொடங்கியது, இங்கு எடுக்கப்பட்ட சிம்புவின் கெட்டப் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் தான் கமிட்டாகியுள்ளார்.
