vijay-sethupathi

வெற்றி படமான சுந்தர பாண்டியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தயாரிப்பாளர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

vijay sethupathy
vijay sethupathy

இயக்குனர் சசிகுமாரின் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சசிகுமார் தயாரித்து இப்படத்தில் நாயகன் வேடத்தையும் ஏற்றார். லட்சுமி மேனன் நாயகியானார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்தார். சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஹிட் பட்டியலில் இணைந்தது. மேலும், மதுரை சின்னமனூரை மையமாக கொண்டு உருவாகிய இப்படம் மதுரை மண் வாசத்தை அச்சுபிசராமல் வெளிப்படுத்தியது.

கோலிவுட்டின் தற்போது இரண்டாம் பாக ஜானரை சுந்தரபாண்டியனும் விட்டு வைக்கவில்லை. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இப்படத்தில் சசிகுமார் தான் நாயகனாக நடிக்கிறார். எஸ்.ஆர்.பிரபாகரனே படத்தை இயக்குகிறார். ஆனால், ஒரு சின்ன மாற்றம் இல்ல இல்ல பெரிய மாற்றம் தான். படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு பதில் தயாரிப்பாளரும் நடிகருமான இந்தர்குமார் நடிக்கிறார். இவர் சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் அவருக்கு வில்லனாக அறிமுகமானவர்.

Vijay sethupathy
Vijay sethupathy

முதல் வில்லன் அனுபவத்தை தொடர்ந்து, தற்போது சுந்தரபாண்டியன் 2 படத்தில் இணைந்து இருக்கிறார். இந்தர்குமார் முன்னதாக குற்றம் 23, தடம் ஆகிய படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுந்தரபாண்டியன் 2 குறித்து மனம் திறந்த இந்தர்குமார், இந்தப் படத்துல நிறைய சர்பிரைஸ் இருக்கு. பெங்களுர் சிட்டில வளர்ந்த எனக்கு, ‘கொடிவீரன்’ கிராமத்து வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு. இந்தப் படமும் கண்டிப்பா எனக்கு நல்ல அனுபவமா இருக்கும். சுந்தரபாண்டியனைவிட, இந்தப் படம் டபுள் ட்ரீட்டாக அமையும். அந்தப் படம் சிங்கிள்னா, இது சிக்ஸர் அடிக்கும் என்கிறார்.