ஐபில்

11 வது சீசன் ஐபில் நிறைவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாதது போல இந்த சீசன் டெல்லி தவிர்த்து, எந்த ஆணிவேணாலும் பிளே – ஆப்புக்கு தகுதி பெரும் சூழல் நிலவுகிறது.

RCB

ஆரம்ப போட்டிகளில் தோல்வியை சந்தித்த கோலியின் டீம், தற்பொழுது ஜெயிக்கும் டீம் காம்பினேஷனை கண்டு பிடித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.முதலில் டெல்லி அணியை அடித்து பறக்கவிட்டனர், அடுத்து பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கியது, பின்னர் சன்ரைசர்ஸ் அணியை கதி கலங்க வைத்தது. தொடர் வெற்றிகளுக்கு பின் இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.

சுந்தர் பிச்சை

பிறப்பால் மதுரைக்காரர். இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர். இவர் கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 செயல்பட்டுவருபவர்.

ட்விட்டர் ஸ்டேட்டஸ்

டெல்லியுடனான போட்டி முடிந்ததும் விராட், தான் ஏ பி உடன் இருக்கும் போட்டோவை அப்லோட் செய்து ட்வீட் போட்டார்.

RCB

“இவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எதிர் முனையில் இருக்கும் நமக்கு பெரியதாக வேலை இருக்காது. இவரே பார்த்துக்கொள்வார். இன்று சிறப்பான பார்ட்னெர்ஷிப். கூடுதல் சிறப்பு நாங்கள் வெற்றி பெற்றது.”

சுந்தர் பிச்சை இதற்கு கமெண்ட் செய்திருந்தார் “நீங்கள் இருவரும் விளையாடுவதை லைவில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. நீங்களும் ஏ பியும் அசாத்தியமாக பேட்டிங் செய்கிறீர்கள். கிளாசிக் கிரிக்கெட் ஷாட் அனைத்துமே. இந்த வருட ஐபில் சீசனை மிகவும் எஞ்சாய் செய்து பார்க்கிறேன்.” என்றார்.

கோலியும் பதிலுக்கு “நன்றி. உங்களை என்டேர்டைன் செய்தது மகிழ்ச்சியே.”

பல்லாயிரக்கணக்கான லைக் மற்றும் ரி ட்வீட் பெற்றுவிட்டது இந்த உரையாடல்.