கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுந்தர் பிச்சை. சென்னையை சேர்ந்த தமிழரான இவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சுந்தர் பிச்சை கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், அரசியல்வாதி சிறையில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் நீங்கள் ஒருமுறை சிறைக்கு சென்றால் அரசு வேலையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

ரூநீங்கள் ஒரு வங்கி வேலைக்கு குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது வென்றிருக்க வேண்டும். அதே நேரம் ஒரு அரசியல்வாதி படிக்கவில்லை என்றால் ஒரு நாட்டின் நிதி அமைச்சராக கூட ஆகலாம் என தனது குமுறலை வெளியிட்டுள்ளார்.