India | இந்தியா
தேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் சுந்தர் பிச்சையிடம் பாராட்டு பெற்ற பெண்
இயற்பியல் தேர்வில் பூஜியம் மதிப்பெண் எடுத்தும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாராட்டு பெற்றுள்ளார்.
சரஃபீனா நான்ஸ்சின் என்ற பெண் தனது டுவிட்டர் பதிவில் “நான் தற்போது வான்இயற்பியலில் முனைவர் பட்டத்திற்கான என்னுடைய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளளேன். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏன்டா இந்த இயற்பியலை உயர்கல்வியாகத் தேர்வு செய்தோம் என்று நான் வேதனைப்படாத நாளே இல்லை
கல்லூரியில் நடந்த இயற்பியல் தேர்வில் இரண்டு முறையும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து பெயில் ஆனேன். இதனால் இயற்பியல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேறு படிப்பைத் தேர்வு செய்யலாமா என்றுகூட நினைத்தேன்.. என்னை வேறு துறைக்கு மாற்றச் சொல்லி பல முறை, என்னுடைய துறை பேராசிரியர்களை கேட்டேன்.
ஆனால் அதற்குவாய்ப்பே இல்லை என்று தெரிந்த பிறகு இயற்பியலை படிக்க ஆரம்பித்தேன். இப்போது நான் பிஹெச்டி (முனைவர்) பட்டத்தை முடித்துள்ளேன். கஷ்டம் என எதுவும் இல்லை. வெற்றி பெற அதிக முயற்சி மட்டும் செய்தால் போதும்” என கூறியுள்ளார்.
சரஃபீனா நான்ஸ்சின் இந்தப் பதிவை கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டரில் `சரியாகச் சொன்னீர்கள்; பலருக்கு முன்மாதிரியானது’ என்ற தலைப்புடன் ரீ ட்விட் செய்து, ஊக்கப்படுத்தியுள்ளார்.
