Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுந்தர் சி தயாரிப்பில் சன் டிவியில் தீபாவளி ஸ்பெஷலாக நேரடி ரிலீசாகும் படமும், அதன் கதையும் இதாங்க
கிட்டதட்ட வருடத்திற்கு 500 படங்களுக்கு மேல் வெளியிடும் தமிழ் திரைப்பட துறை மட்டும் தான். பல கோடி பிஸ்னஸ் சாம்ராஜ்யம். கோலிவுட், கோடம்பாக்கம் என கலை காட்டும் கலாச்சாரம் இங்கே. கொரானாவின் தாக்கத்தால் திரை அரங்குகள் மூடப்பட, படங்கள் OTT ரிலீஸ் சென்றது.
இந்நிலையில் முன்பே நாம் சொன்ன தகவல் தற்பொழுது சன் டிவி பதிவிட்ட ட்வீட் வாயிலாக உறுதி ஆகிவிட்டது.

mayabazaar official tamil remake
சுந்தர் சி கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாயாபஜார் எனும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அவர் வாங்கினார். இந்த படத்தை அவர் தயாரிக்க, அவருடைய ஆஸ்தான அசிஸ்டண்ட் பத்ரி என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தில் அஸ்வின், ஷாம், பிரசன்னா, யோகி பாபு போன்றோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி” என தலைப்பு வைத்துள்ளனர். குறைந்த பட்ஜெட் படம் தான். நேரடியாக சன் நெக்ஸ்ட் ஆப் மற்றும் சன் டிவியில் இப்படத்தை திரையிடுகின்றனர்.

naanga romba busy
கதை – போலீசாக பிரசன்னா தன் மனைவி மருத்துவ செலவுக்காக வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது போல திட்டம் தீட்டுகிறார். அதற்கு திருடன் யோகி பாபுவுடன் கூட்டணி போடுகிறார். இந்த நேரத்தில் அஸ்வின் காதலி வீட்டில் ராயுடு நடக்க, அஷ்வின் இவர்களை பின் தொடர்ந்து டீம்மில் இணைகிறார்.
ஷ்யாமின் உறவினர் வீட்டில் தான் அந்த ரெய்டு. உயர் போலீஸ் அதிகாரியான அவரின் பணமே அது. அதன் பின் இவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டமே படம். 500 , 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்த நேரத்தில் படம் நடப்பது போன்ற கதைக்களம்.
காமெடிக்கு பஞ்சம் இல்லாத அழகிய தீபாவளி இனிப்பே இப்படம்.
