Videos | வீடியோக்கள்
பழைய ரைட்டாக மாறி கொல குத்து குத்திய தலைநகரம் 2 டீசர்.. கெத்து காட்டும் சுந்தர் சி-யின் ரீ என்ட்ரி
சுந்தர் சி நடிப்பில் உருவாகி இருக்கும் தலைநகரம் 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வரும் படம் தலைநகரம் 2. இப்படத்தின் முதல் பாகத்தை சுராஜ் இயக்கி இருந்தார். இதில் சுந்தர் சி ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி இப்படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை வி இசட் துரை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுந்தர்சிக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
Also Read : அடுத்தடுத்து தோல்வி படங்கள்.. லெஜெண்ட் அண்ணாச்சியை வளைத்துப் போட நினைக்கும் சுந்தர்.சி
மேலும் வடிவேலு, யோகி பாபு, தம்பி ராமையா போன்ற காமெடி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்போது தலைநகரம் 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தலைநகரம் படத்தைப்போல இந்த படத்திலும் மீண்டும் ரத்தக்களறியுடன் கெக்து காட்டுகிறார் சுந்தர் சி.
இதில் ஒவ்வொரு வசனத்திலும் சுந்தர் சி தெறிக்கவிட்டுள்ளார். எட்டு வயசுல பசியில செத்து இருக்க வேண்டியது, 18 வயசுல என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை என்று மாஸ் வசனங்களை சுந்தர் சி பேசியுள்ளார். மேலும் படம் முழுக்க ரத்த வாடை அடிக்கிறது. சுந்தர்சிக்கு இப்படம் ஹிட் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
மேலும் தலைநகரம் 2 படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து சுந்தர் சி யின் படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படாத நிலையில் இந்த படம் சரியான கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
Also Read : ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்
