Tamil Cinema News | சினிமா செய்திகள்
பந்தா பண்ணும் ஹிப்ஹாப் ஆதி.. பொடனியில் அடித்து துரத்திவிட்ட சுந்தர் சி
தமிழ் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் சிலர் ஒரு சிலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பெரிய ஆளாக்கி விட்டு பின்னர் அடித்துக்கொள்ளும் சம்பவம் ஒன்றும் புதிதல்ல.
அப்படித்தான் அண்ணன் தம்பி என கட்டி கொண்ட சுந்தர் சி மற்றும் ஹிப்ஹாப் தமிழா இடையே பிரச்சினை ஒன்று வெளியாகி இருவரையும் பிரித்து வைத்து விட்டதாம்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இண்டிபெண்டன்ட் இசையமைப்பாளர் என சொல்லிக் கொள்வார். இதனை பார்த்த சுந்தர் சி சரி ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுப்போம் என சென்றாராம்.
அப்பவே மொத்த படமும் எனக்கு கொடுத்தால் தான் பண்ணுவேன் என சுந்தர் சி இடம் கேட்டதாக அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார். முதலில் எதார்த்தமாக தெரிவித்த சுந்தர் சி அதுவே தனக்கு ஏழரையாக அமையும் என தெரியாமல் கூறி விட்டார் போல.
தம்பி என்ற பாசத்தில் தன்னுடைய சொந்த காசை போட்டு மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக ஆக்கிவிட்டார். ஹீரோவானதுமே ஹிப்ஹாப் தமிழா கொஞ்சம் திமிர்த்தனம் காட்டியது அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்தது.
அந்த படம் ஓரளவு ஹிட் அடிக்க மறுபடியும் நட்பேதுணை எனும் படத்தை கொடுத்தார். ஆனால் அந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் விட்டதை பிடித்து விட வேண்டும் என மீண்டும் நான் சிரித்தால் எனும் படத்தை எடுத்தார் சுந்தர் சி.
ஆனால் அப்போது சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் பந்தா காட்டி பல லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாராம் ஹிப்ஹாப் ஆதி.
இதனால் கடுப்பான சுந்தர் சி படம் வெளியானதும் பார்த்துக்கொள்ளலாம் என இருந்த நிலையில் அவருக்கு தகுந்த மாதிரி அந்த படமும் மண்ணைக் கவ்வியது. உடனடியாக ஹிப்பாப் தமிழா உடனான உறவை முறித்துக்கொண்டார் சுந்தர் சி.
சுந்தர் சி படம் எடுத்தால் ஹிப் ஹாப் தமிழா ஆதி தான் இசையமைப்பார் என சமீப காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது அரண்மனை 3 படத்திற்கு சத்யா என்ற இசையமைப்பாளர் தான் இசையமைக்க உள்ளாராம்.
இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
