Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவியில் நேரடியாக வெளியாகும் சுந்தர் சி படம்.. அதிர்ச்சியில் தியேட்டர்காரர்கள்
சுந்தர் சி படத்தை நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பவுள்ள செய்தி தான் தற்போது கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்குமேல் தியேட்டர்காரர்களின் வயிற்றில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்காரர்களுக்கு மினிமம் கேரண்டி இயக்குனர்களாக சிலர் இருப்பார்கள். அந்த வகையில் ஒரு படத்தில் விட்டாலும் இன்னொரு படத்தில் போட்டதை எடுத்து கொடுப்பவர் தான் சுந்தர் சி.
சுந்தர் சியின் காமெடி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக மினிமம் கேரண்டி இயக்குனராக வலம் வருகிறார்.
இந்நிலையில் சுந்தர் சி கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாயாபஜார் எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தை அவர் தான் தயாரிக்கிறார்.
மேலும் இந்த தமிழ் பதிப்பை அவருடைய ஆஸ்தான அசிஸ்டண்ட் இயக்குனர் பத்ரி என்பவர் இயக்குகிறார். இதில் ஷாம், பிரசன்னா, யோகி பாபு போன்றோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை ஒரே கட்டமாக முடித்துவிட்டு நேரடியாக தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். மேலும் இதை சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளார்களாம்.
ஏற்கனவே தியேட்டர்காரர்களுக்கு OTT பெரிய தலைவலியாக இருக்கும் நேரத்தில் பிரபல இயக்குனரின் படம் நேரடியாக டிவி சேனலில் வெளியாவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்கார்ன் நவுத்துப் போயிடும் போல!
