Connect with us
Cinemapettai

Cinemapettai

sundar-c-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலேசியாவில் உள்ள மலாய் மொழியில் முதல் முதலில் ரீமேக் ஆன முதல் தமிழ்ப்படம் இதுதான்.. அதுவும் சுந்தர் சி படம்

கமர்சியல் படங்களை இயக்குவதில் வல்லவர் சுந்தர் சி. முடிந்தவரை தன்னுடைய படங்களில் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக கொடுத்து ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைப்பதில் கில்லாடி தான்.

அந்த வகையில் சுந்தர் சி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான்.

பெரும்பாலும் சுந்தர் சி படங்களில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்து இருப்பார்கள். அந்த வகையில் அவர்கள் நடித்த ஒரு படம் மலேசியாவில் உள்ள மலாய் மொழியில் முதல் முறையாக ரீமேக் செய்யப்பட்டது.

1996 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் ரம்பா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்தது.

இந்த படத்தை தான் முதன்முதலில் மலேசிய மொழியில் ரீமேக் செய்ய பரிசீலனை செய்யப்பட்டதாம். இந்த தகவலை டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல் நிறுவனர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை-3 திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top