Connect with us
Cinemapettai

Cinemapettai

sundar-c-cwc

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போனா என்னோட இமேஜ் என்னாகுறது? சர்ச்சையை கிளப்பிய சுந்தர் சி பட நடிகை

சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவரை அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதுக்கு அந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் வரமுடியாது என கூறியது குக் வித் கோமாளி ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

ஆயிரம் சொல்லுங்கள். திறமைகளை கண்டறிவதில் சிறந்த டிவி விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து பல நட்சத்திரங்கள் சாதித்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், புகழ் போன்றோரைக் குறிப்பிடலாம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோர்தான் முதலில் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவார்கள். அந்தளவுக்கு தங்களுடைய சேட்டைகளால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளனர்.

விஜய் டிவி ஏற்கனவே 2 சீசன்களை வெற்றிகரமாக கொண்டு சென்ற நிலையில் தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசனுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்த அனுயாவை அணுகியுள்ளது விஜய் டிவி.

anuya-cinemapettai

anuya-cinemapettai

நகரம் படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்தவர். அதுமட்டுமில்லாமல் ஜீவாவுக்கு ஜோடியாக சிவா மனசுல சக்தி படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு பெரிய நடிகையாக வருவார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் நடித்தவர் என்று சொன்னால் கூட தெரியாதவர்களுக்கு சுசி லீக்ஸ் அனுயா என்று சொன்னால் அவ்வளவு பரிட்சயம். அம்மணியின் கில்மா புகைப்படங்கள் வெளியாகி செம வைரல் ஆனது.

மார்க்கெட் இல்லாத ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தற்போது ஸ்டார் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதே மாதிரி வாய்ப்பு அனுயாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டால் இமேஜ் வேஸ்ட் ஆகிவிடும் என அந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டாராம்.

பொழைக்கத் தெரியாத புள்ள!

Continue Reading
To Top