fbpx
Connect with us

Cinemapettai

தரமான திகில் திரில்லர்.. இருட்டு திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

தரமான திகில் திரில்லர்.. இருட்டு திரைவிமர்சனம்

ஒரே படத்தில் இரண்டு இயக்குனர்கள் இணையும் பொழுது என்றைக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். முகவரி, தொட்டி ஜெயா, ஏமாளி படங்களை தொடர்ந்து வி.இசட்.துரை இயக்கியுள்ள ஏழாவது படம். மூன்று வருட இடைவெளிக்கு பின் மீண்டு ஹீரோவாக வந்துள்ளார் சுந்தர் சி.

கதை – மலைப்பிரதேசத்தில் சிறிய கிராமம் அது. தீடிரென இருள் சூழ ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் 6 கொலைகள் நிகழ்கிறது. திக்குமுக்காடுகிறது லோக்கல் போலீஸ். கேஸை கவனித்த இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து இறக்கிறார். அந்த ஸ்டேஷனுக்கு தான் சார்ஜ் எடுக்கிறார் சுந்தர் சி. தனது மனைவி, மகள் மற்றும் நாயுடன் புதுவீட்டில் குடிபுகுகிறார். கேஸை பற்றி துப்பறிய; தன்னை சுற்றி சில அமானுஷ்யங்கள் நடப்பதை உணருகிறார். அதே போல சுந்தர் சியின் மனைவியும் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கிறார். தன் மனைவி உருவத்தில் வேறு ஒருவள் வருவதை கண்டு பதறுகிறார்.

மெதுவாக ஆரம்பித்து பின் ஜின்கள் பற்றிய பின்கதை தெரியவர விறுவிறுப்பாகிறது திரைக்கதை. பல நூறு வருடங்களுக்கு முன் அந்த ஊரில் என்ன நடந்தது, அதன் விளைவாக 6 ஜின்கள் இணைந்து இப்பொழுது என்ன செய்யப்போகிறது என்பது தெரியவர, தனது மகளை மற்றும் அந்த ஊரை எவ்வாறு ஹீரோ காப்பாற்றினார் என்பதே கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல் – அம்மாஞ்சித்தனமாக மொக்கை காமெடி சிலதுடன் படம் பயணிக்கிறது. மேலும் ஹீரோயின் வேடத்தில் சாக்ஷி சொவ்த்ரி கவர்ச்சி பொருளாகவே வருகிறார். என்னடா திகில் படத்தில் பிட்டு ஜாஸ்தி என யோசிக்கும் பொழுது, சாய் தன்ஷிகாவை அறிமுகப்படுத்தி நம்மை கதிகலங்க வைக்கிறார் இயக்குனர். குறிப்பாக தியா மற்றும் ஜின் கதாபாத்திரங்கள் சூப்பர் வகையறா.

பிளஸ் – இஸ்லாமிய ரெபிரன்சில் ஜின், ஒளிப்பதிவு, பின்னணி இசை, வசனம்

மைனஸ் – சுமாரான கிராபிக்ஸ், பல இடங்களில் லாஜிக் மீறல், அவசரமாக முடிக்கப்பட்ட கிளைமாக்ஸ்

சினிமாபேட்டை வெர்டிக்ட் – காமெடி பேய் படங்கள் பார்த்து வந்த நமக்கு அசத்தலான இன்வெஸ்டிகேஷன் கலந்த ஹாரர் படம்  இந்த இருட்டு. இயக்குனர் நடிகர்களிடம் இருந்து இன்னமும் அதிக வேலை வாங்கி இருக்கவேண்டும். பல காட்சிகளில் ஒரே டேக்கில் சுமாரான நடிப்பை ஓகே செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. எடிட்டிங்கில் கூடுதல் கவனம், நல்ல மார்க்கெட்டிங் செய்து இப்படத்தை ரிலீஸ் செய்து இருந்தால், கட்டாயம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் .

குழந்தைகளை கட்டாயம் படம் பார்க்க கூட்டி செல்ல வேண்டாம். நாம் பார்த்த ஷோவில் இரண்டாம் பாதியில் குழந்தை பயந்து போக, குடும்பமே பதறியபடி வெளியே சென்றனர். இதுவே இப்படக்குழுவின் வெற்றிக்கு சாட்சி.

இருட்டு – இரட்டிப்பு திகில்

சினிமாபேட்டை ரேட்டிங் 3 .25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top