Sundar C

இயக்குனர் சுந்தர் சி நடிகை குஷ்பு மட்டும் இல்லை என்றால் இந்த நடிகையிடம் என் காதலை சொல்லிருப்பேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருகிறார் இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், இவர் தமிழில் பல படத்தை இயக்கியுள்ளார், இவர் முதல் முதலில் தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார், இவர் ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

அதிகம் படித்தவை:  செண்டிமென்ட் ஆன விராட் கோலி, காமெராவுடன் விளையாடிய ரோஹித் சர்மா. 2 இன் 1 வீடியோ உள்ளே.

அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா,அருணாசலம், அன்பே சிவம் போன்ற ஹிட் படத்தை கொடுத்தவர் மேலும் மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை காமெடி படத்தை கொடுத்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள், இந்த நிலயில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் சி இடம் பல நடிகைகளின் புகைப்படங்களை காட்டியுள்ளார்கள்,அப்பொழுது இறந்துபோன சௌந்தர்யா புகைப்படத்தை காட்டியுள்ளார்கள் அந்த புகைப்படத்தை பார்த்த சுந்தர் சி எமோஷன் ஆகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரெஜினாவுடன் இணையும் கள்ளபார்ட் படத்துக்காக 10 கிலோ உடல் எடையை கூட்டிய அரவிந்த் சாமி. போட்டோ உள்ளே.

அதன் பிறகு குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன், அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி இவர் எப்பொழுதும் சௌந்தர்யாவுடன் அவர் அண்ணன் இருப்பார் இறக்கும் பொழுது கூட இருவரும் சேர்ந்து இறந்து விட்டார்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.