உலக சினிமா ரசிகர்கள் இதுவரை இந்திய படங்கள் என்றால் இந்தி படங்கள் என்றே நினைத்து வந்தனர். ஆனால் ‘பாகுபலி’ மற்றும் ‘கபாலி’ ஆகிய படங்கள் உலகை தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

இந்நிலையில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’ என்ற படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் சாபு சிரில் கலை இயக்குனராகவும், கிராபிக்ஸ் இயக்குனராக கமலக்கண்ணனும் பணிபுரியவுள்ளனர்.

இந்த படம் இந்தியா, அமெரிக்கா, டென்மார்க், உக்ரைன், ஈரான் ஆகிய நாடுகள் உள்பட மொத்தம் 11 நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். உலக தரத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.