சுந்தர்.சி படங்கள் என்றாலே கண்டிப்பாக ஹிட் தான். இன்றைய ஆடியன்ஸ் பல்ஸ் தெரிந்து படம் இயக்கி வெற்றி பெறுபவர்.இந்நிலையில் இவர் அடுத்து தேனாண்டாள் தயாரிக்கும் 100வது படத்தை இயக்கவுள்ளார்.

இப்படம் மஹதீரா போன்ற கதையம்சம் கொண்டதாம்.மேலும், பாகுபலி-2 படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்பவர்களே இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கவிருக்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதில் நடிக்க முன்னணி ஹீரோ, ஹீரோயினிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.