Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

7 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே என்னை பல முறை அந்த ஆட்டோ டிரைவர்..? சுனைனா பரபரப்பு பேட்டி.!

நடிகை சுனைனா தான் 4 வருடங்களாக பாலியல் சீண்டலுக்கு ஆளானதைப் பற்றிக் தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார், சுனைனா பிரபல இணைய தளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், அந்தப் பேட்டியில் சுனைனாவிடம் Metoo பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்பொழுது நடிகை சுனைனா தனக்கு நடந்த metoo அனுபவங்களை பற்றி விரிவாகப் பேசினார், அவர் கூறியதாவது எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், தினமும் ஆட்டோவில் தான் பள்ளிக்கு செல்வேன் என்னுடன் என் தோழிகளும் பள்ளிக்கு வருவார்கள் அப்பொழுது ஆட்டோ டிரைவருடன் அமர்ந்து செல்வது யார் என்பது எங்களுக்கு போட்டியாக இருக்கும், ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் என்னை தான் அவர் பக்கத்தில் உட்கார வைப்பார்.

நான் இதை முதலில் பெருமையாகத்தான் எடுத்துக்கொண்டேன், அவருக்கருகில் அமர்ந்து கொண்டு நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வேன் ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் வெளியில் சொல்ல முடியாத பல விஷயங்களை செய்வார் ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாது இப்படி நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அந்த ஆட்டோ ஓட்டுனர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அதன்பிறகு எனக்கு விவரம் தெரிந்த பிறகுதான் தெரிந்தது அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் என்ன செய்தார் என்பது அன்று முதல் இன்று வரை நான் அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு நேர்ந்த அவலத்தை நான் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை, அந்த ஆட்டோ ஓட்டுனர் என் கையில் கிடைத்தால் ஏன் இப்படி செய்தாய் என சட்டையை பிடித்து கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top