Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுக்கு ஆப்படித்த சன் டிவி.. அமேசானில் வெளியான அடுத்த வாரம் சேனலில் ரிலீஸ்!
சூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் தற்போது கோலிவுட் சினிமாவில் டாக் ஆஃப் தி டவுன் ஆகி உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படத்தை தூக்கி OTTயில் கொடுத்து விட்டாரே என தியேட்டர் ஓனர்கள் அவர் மீது செம காண்டில் உள்ளனர்.
அக்டோபர் 30-ஆம் தேதி இந்த படம் அமேசான் தளத்தில் வெளியாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல சன் டிவியும் புதிதாக சூர்யா ரசிகர்கள் மனதை காயப்படுத்த ஆரம்பித்துள்ளது என்கிற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தை அடுத்த இரண்டு வாரங்களில் சன் டிவியில் வெளிவிட ஆயத்தமாக வேலை செய்து வருகிறார்களாம்.
நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் சூரரைப்போற்று படத்தை வெளியிட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஆனால் ஒரு சிலரோ சூரரைப்போற்று படம் பொங்கல் திருநாளில் தான் சன் டிவியில் வெளியிடப் போகிறார்கள் எனவும் கருத்துக்கள் பரவி வருகின்றன. எது எப்படியோ சூர்யாவை பந்து போல் வைத்து விளையாடுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
