Pongal Movies: நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
அதேபோல் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைத்து இருக்கிறது. அதனால் எல்லோரும் ஏகப்பட்ட பிளான்களை வைத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க சின்னத்திரை சேனல்கள் இந்த மூன்று நாட்களிலும் ஆடியன்ஸை டிவி முன் ஆஜராக்குவதற்கு ஏகப்பட்ட வியூகம் வகுத்துள்ளன.
அதன்படி நாளை பொங்கலுக்கு போட்டி சேனல்கள் ஒவ்வொன்றும் புது புது படங்களை களம் இறக்க உள்ளன. அதைப் பற்றி விரிவாக காண்போம்.
TRP-யில் மல்லுக்கட்ட போகும் விஜய் டிவி, சன் டிவி
இதில் சன் டிவி விஜய் டிவி எப்போதுமே டிஆர்பி சண்டையில் முன்னிலை வகிக்கின்றன. அதன்படி நாளை அதாவது ஜனவரி 14 அன்று சன் டிவியில் காலை 11:00 மணிக்கு சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஒளிபரப்பாக உள்ளது.
அதை அடுத்த 2.30 மணிக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் ஒளிபரப்பாகும். அதேபோல் ப்ரைம் டைம் ஆறு மணிக்கு சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த வேட்டையன் ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல் விஜய் டிவியில் பொங்கல் அன்று காலை 12.30க்கு வாழை படமும் 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹிட்டான அமரன் படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவியில் 10 மணிக்கு டான் 1.30 க்கு இந்தியன் 2, 6 மணிக்கு துணிவு ஆகிய படங்கள் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10.30 மணிக்கு ரத்னம் 3.30க்கு பிரதர் 6.30க்கு கோட் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகிறது.
இதில் ப்ரைம் டைம் படங்களுக்கு தான் கடும் போட்டி இருக்கும். அதில் அமரன் வேட்டையன் இரண்டும் டிஆர்பியில் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை.