இந்த வாரம் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்.. தொடர்ந்து முதலிடத்தை பிடிக்கும் ஒரே சீரியல்!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் தற்போது சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதில் டாப் 4 இடங்களைப் பிடித்த சீரியல் லிஸ்டில் முதல் இடத்தை கயல் சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆனாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை சைத்ரா ஏற்கனவே ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் வில்லியாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடம் பிரபலம் அடைந்துள்ளார்.

அதேபோல் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சஞ்சீவ், விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் இந்த சீரியலில் தன்னுடன் நடித்த ஆலியா மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இரண்டு வெவ்வேறு சீரியல்களின் மூலம் பிரபலமடைந்த சைத்ரா மற்றும் சஞ்சீவ் இருவரையும், கயல் சீரியலில் ஜோடி சேர்ந்துள்ள இந்த ரீல் ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அத்துடன் இவர்களுடைய கெமிஸ்ட்ரி சீரியலில் பக்காவாக ஒர்க்கவுட் ஆகி உள்ளது. அதன் விளைவாக இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் உள்ளது. இதைத் தொடர்ந்து சன் டிவியில் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் டிஆர்பி-யில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இரண்டு மனைவிகளை வைத்துள்ள கதாநாயகன் எப்படி இரண்டுபேரையும் சமாளிக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை. அத்துடன் ரொம்பவும் வெகுளியாக இருக்கும் சீரியலின் கதாநாயகி சுந்தரிக்கு தற்போது தன்னுடைய கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது என்பதை இப்போதுதான் தெரியவர, இனி வரும் நாட்களில் சுந்தரி புதுமைப் பெண்ணாக தன்னுடைய நடிப்பை காட்டப் போகிறார் என்பது இந்த சீரியலுக்கு கூடுதல் விருவிருப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது இடம் தாலாட்டு என்ற குடும்ப பின்னணி உடைய சீரியலுக்கும், 4-வது இடம் காதல் டிராக் ஓடிக்கொண்டிருக்கும் அருவி என்ற சீரியலுக்கும் கிடைத்துள்ளது. எனவே சன் டிவியின் இந்த நான்கு சீரியல்தான் சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய சீரியலாக தற்போது மாறியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்