fbpx
Connect with us

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தட்டி தூக்கிய பிரபல சேனல்.. பிக் பாஸ் இருந்தும் சங்கு ஊதிய ரசிகர்கள்!

suntv-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தட்டி தூக்கிய பிரபல சேனல்.. பிக் பாஸ் இருந்தும் சங்கு ஊதிய ரசிகர்கள்!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4.

எனவே இந்த நிகழ்ச்சி  தொடங்கியபோது முன்னணி தமிழ்  சேனல்களின் வயிற்றில் புளியை கரைத்தது. ஏனென்றால் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங் பிக்பாஸ் நிகழ்ச்சி சரசரவென குறைத்து விடும் என்ற பதட்டத்தில் இருந்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக, அக்டோபர் மாதத்தின் இறுதி வார டிஆர்பி ரேட்டிங்கில், விஜய் டிவியை பின்னுக்குத்தள்ளி சன் டிவி முன்னிலை வகிக்கிறது.

ஏனெனில் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்கள் மட்டும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அழுகாச்சி நிகழ்ச்சி ஆக மாறிவிட்டது.

இதனால் போர் ஆன  ரசிகர்கள் கடுப்பாகி மறுபடியும் சன் டிவி  சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர். இப்படி பிக் பாஸ்  நிகழ்ச்சியை கையில் வைத்துக்கொண்டே டிஆர்பி ரேட்டிங்கை பறி கொடுத்துவிட்டது விஜய் டிவி.

TRP-rating-cinemapettai

TRP-rating-cinemapettai

எனவே இனிவரும் நாட்களிலாவது  ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போடுவதுடன் மட்டுமல்லாமல், தங்களது டிஆர்பி ரேட்டிங்கையும் எகிற வைக்க வேண்டும்  என்ற எண்ணத்துடன் பக்கா ப்ளான் போட்டு வருகிறது விஜய் டிவி.

Continue Reading
To Top