புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கணவன் செய்த துரோகம்.. சுந்தரி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களை கவர்வதற்காக கதையில் பல விறு விறுப்புகளை கூட்டி வருகிறது.

அதில் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. சுமாரான அழகுடன் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள் பற்றி விவரிக்கிறது இந்த சீரியல்.

இதில் ஹீரோயின் சுந்தரி, கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வருகிறார். ஆனால் கார்த்திக் கருப்பு நிறத்துடன் இருக்கும் சுந்தரியை பிடிக்காமல் அனு என்ற பெண்ணுடன் ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இதை தன் மனைவி சுந்தரி உட்பட குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கார்த்திக்கின் இரண்டாவது மனைவி அனுவின் கம்பெனியில் வேலைக்கு சேரும் சுந்தரி அவர்களின் குடும்பத்துடன் நெருக்கமாக பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் தன் கணவர் கார்த்திக்கின் இரண்டாவது திருமணம் குறித்து சுந்தரிக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ந்து போகும் சுந்தரி தற்போது என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கணவனின் இந்த துரோகத்தால் இதுவரை கிராமத்து வெகுளியாக இருந்த சுந்தரி இனி தைரியமான பெண்ணாக மாறி துரோகம் செய்த கார்த்திக்கு பதிலடி கொடுப்பார். வரும் வாரங்களில் இது போன்ற காட்சிகள் சுந்தரி சீரியலில் வர இருக்கிறது.

சுந்தரியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் பலரும் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த சீரியல் நிஜ வாழ்க்கையில் பல பெண்களுக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து காட்டுவதால் டிஆர்பியிலும் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News