புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

புது சீரியலால் டிஆர்பி ரேட்டிங்கில் சிம்மாசனத்தில் ஜொலிக்கும் சன் டிவி.. சுந்தரியை காப்பாற்ற களமிறங்கும் அணு

Sun tv TRP Rating: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை தக்கவைத்துக் கொண்டே வருகிறது. இதில் வேறு எந்த சேனலுக்கும், சீரியலுக்கும் இடமே இல்லை என்பதற்கு ஏற்ப சன் டிவி அடுத்தடுத்து புதிய சீரியல்களை கொண்டு வருவதால் அதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் சிம்மாசனத்தை பிடித்து விடுகிறது. அப்படி இந்த வாரம் எந்த சீரியல் முதல் 5 இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சுந்தரி: சுந்தரி சீரியல் கிட்டத்தட்ட ஆரம்பித்து மூன்று வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என பிரித்து சுந்தரி கலெக்டர் ஆனதை அடுத்து அனு மற்றும் கார்த்திக்கின் குழந்தையை சுந்தரி வளர்த்து வருகிறார். இதில் அணு உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் கார்த்தி, அணுவை கண்டுபிடிக்கணும் என்ற நோக்கத்தில் சுந்தரியை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்.

அந்த வகையில் தற்போது சுந்தரி இக்கட்டான சூழலில் இருப்பதை தெரிந்து கொண்ட அணு, சுந்தரியை காப்பாற்றுவதற்காக களம் இறங்க போகிறார். இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப அணு கார்த்திக் ஜோடி பழைய மாதிரி இணையப் போகிறது. அதனால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.27 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: பிரபு மற்றும் ஆதிரையின் கல்யாணம் பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு பல சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதை எல்லாம் தாண்டி ஆதிரை மற்றும் பிரபுவின் கல்யாணம் நடக்குமா என்பது தான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரம் 8.96 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: ஆனந்திக்கு ஜோடி அன்புவா அல்லது மகேசா என்ற கேள்வி புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தி இரண்டு பேருடன் பாசமாக இருந்து பாசத்தை கொட்டுவதால் யாருடன் யாருக்கு கல்யாணம் நடக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த வாரம் 9.44 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: சூர்யா, அம்மாவை வெறுப்பேற்றுவதற்காக நந்தினி கழுத்தில் தாலி கட்டி வந்து விட்டார். ஆனால் நந்தினி குடும்பத்தை பார்த்தாலே சுந்தரவல்லி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். மட்டு மரியாதை இல்லாமல் பேசி அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதை என்னதான் சூர்யா தட்டி கேட்டு நந்தினி பக்கத்தில் இருந்தாலும் சுந்தரவல்லி கொடுக்கும் டார்ச்சரை நந்தினி சகித்துக் கொண்டு வருகிறார். இதற்கு ஒரே தீர்வு நந்தினி பதிலடி கொடுக்கும் விதமாக சுந்தரவல்லிக்கு எதிராக பேசினால் தான் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.75 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: எழில் கயல் கல்யாணம் நடந்தாலும் எழிலின் ஆசையை கொஞ்சம் கூட யோசிக்காமல் கயல் லட்சியத்தையும், அப்பா பட்ட அவமானங்களை சரி செய்யும் விதமாக எழில் உடன் கைகோர்த்து அப்பாவின் சொந்த ஊருக்கு சென்று எல்லா பிரச்சினையும் சரி செய்ய வேண்டும் என்று கயல் ஆசைப்படுகிறார். அதன்படி எழிலும் சம்மதம் கொடுத்து அனைவரும் கிராமத்துக்கு போகும் கதைகளாக இனி தொடர போகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 10.30 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

ஆனால் சன் டிவியில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு என இரண்டு புத்தம் புது சீரியல்கள் வந்ததால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ரஞ்சினி சீரியல் புத்தம் புதிதாக வந்திருக்கிறது. அத்துடன் ஆடுகளம் சீரியலும் வர இருப்பதால் சன் டிவி சேனல் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு மக்களிடம் ஒரு இடத்தை தக்க வைத்து விட்டது.

- Advertisement -

Trending News