Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவி TRP-யில் கெத்து காட்டும் பிரபல சீரியல் திடீரென நிறுத்தம்? கும்பிடு போடும் கணவன்மார்கள்
சமீபகாலமாக வாரத்திற்கு ஏழு நாட்களும் முன்னணி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே வாரம் முழுவதும் அந்த சீரியலை பார்க்க ரசிகர்கள் இருக்கிறார்களா என்பது அந்தந்த சேனல்களுக்கு தான் வெளிச்சம்.
அதுவும் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் சமீபகாலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.
அப்படி சன் டிவி சீரியலில் சமீபகாலமாக ரசிகர்களின் பேவரைட் சீரியலாக மாறி இருக்கிறது ரோஜா. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் ரோஜா சீரியல் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
டிஆர் ரேசில் முன்னணியில் இருக்கும் ரோஜா சீரியலை நிறுத்தும் அளவுக்கு என்ன பிரச்சனை என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
ஆனால் இது முற்றிலும் வதந்தி தான் எனவும், விரைவில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ரோஜா சீரியல் பயணிக்கும் எனவும் கூறுகின்றனர். விரைவில் ரோஜா சீரியலை சேர்ந்த யாராவது வீடியோ எடுத்து வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும்.

roja-serial
