Connect with us
Cinemapettai

Cinemapettai

trp sun vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தில் சன் டிவி சீரியல்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் எது என்பதை அந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டை வைத்து அறிந்து கொள்ளலாம். அந்தவகையில் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் சன் டிவி மற்றும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவுகிறது.

கடந்த சில மாதங்களாகவே சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை கயல் சீரியல் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இடம் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் வானத்தைப்போல சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

மூன்றாவது இடம் இரண்டு மனைவிகளை ஒரு டிராக்கில் ஓட்டிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 4-வது இடம் ரொமான்டிக் சீரியலான ரோஜா சீரியலுக்கும் ,ஐந்தாவது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

ஆறாவது இடம் புத்தம்புது சீரியலாக துவங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. அதைப்போல் ஏழாம் இடத்தை அபியும் நானும் சீரியலும், எட்டாமிடம் அன்பே வா சீரியலும், 9-வது இடம் அருவி மற்றும் பத்தாவது இடம் சந்திரலேகா சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

இதேபோன்று விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பாக்கியலட்சுமி சீரியலும், இரண்டாமிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களிலும் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடம் ராஜாராணி2 சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

நான்காவது இடம் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கும், ஐந்தாவது இடம் மௌனராகம் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து புதிதாக துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே2, ஆறாவது இடத்தையும் தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, முத்தழகு, நாம் இருவர் நமக்கு இருவர் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Continue Reading
To Top