சன் டிவியின் டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்த படங்கள்.. ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்

திரையரங்குகளில் வெளியாகும் படத்தை காட்டிலும் பண்டிகையின்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களை மக்கள் குடும்பத்துடன் பார்க்கிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான படங்களில் டிஆர்பிஇல் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்களை பார்க்கலாம்.

விஸ்வாசம்: சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். இப்படம் 2019 இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் சன் டிவிக்கு விற்கப்பட்டது. விஸ்வாசம் படம் சன் டிவியின் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பிச்சைக்காரன்: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாட்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருந்தது. பிச்சைக்காரன் படம் சன் டிவியில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பிச்சைக்காரன் படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அண்ணாத்த: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அண்ணாத்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. இப்படம் டிஆர்பியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

சர்கார்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்கார். தேர்தல் மோசடிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. சர்கார் படம் சன் டிவி டிஆர்பி இல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

சீமராஜா: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீமராஜா. இப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்திருந்தார். சீமராஜா படம் சன் டிவியில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படம் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்