முக்கியமான 5 சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. மக்களின் பேவரைட் சீரியலுக்கு வந்த நிலமை

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கால்வாசி சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோடு கிட்ட நெருங்கிய பிறகு தான் முடிக்கவா வேண்டாமா என்று யோசனையே பண்ணுவார்கள். அந்த அளவிற்கு இழுத்தடித்துக் சுமார் மூன்று வருடமாவது ஒரு நாடகத்தை கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு, எந்த சீரியல் எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகிறதோ அதை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அப்படி தற்போது சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப் போகிறார்கள். அது என்ன சீரியல்கள் என்பதை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் தற்போது முடிவுக்கு தயாராகிய நிலையில் இருப்பது இனியா சீரியல் தான். கிட்டத்தட்ட இந்த நாடகம் வந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு போல தற்போது மக்களிடம் கிடைக்காததால் இதை முடிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொன்றாக ஓரம் கட்டி வரும் சன் டிவி சேனல்

ஆனால் இதற்கு முன்னதாகவே முடிக்க வேண்டிய ஒரு சீரியல் என்னவென்றால் மிஸ்டர் மனைவி. இதுதான் முதலில் முடிப்பதற்கு சன் டிவி சேனல் முடிவெடுத்து இருந்தது. ஆனால் இதற்கு இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் கூடி வராததால் முதலில் இனியாவை முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டாவது இதை முடிக்கலாம் என்று முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து சுந்தரி சீரியலும் முடிய போகிறது என்று பல வாரங்களாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் சுந்தரி மற்றும் வெற்றியின் திருமணம் நடந்த பிறகு அத்துடன் சுபம் போட்டு விட வேண்டும் என்பதற்காக அந்த ஒரு நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மலர் சீரியல் முடிய போகிறது.

இதனை அடுத்து மக்களின் பேவரிட் சீரியலாக இடம் பிடித்த ஒரு சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது முடிவுக்கு வரப்போகிறது. அது என்ன சீரியல் என்றால் ஈஸ்வரி மற்றும் அழகு சுந்தரத்தின் நடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை கவர்ந்த ஆனந்த ராகம் சீரியல்தான். இந்த சீரியலும் இந்த வருடத்திற்குள் முடித்துவிட்டு புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்க சன் டிவி முடிவு எடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு இன்னொரு காரணமும் என்னவென்றால் சன் டிவி சேனல் உடன் போட்டி போட்டு விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் நெருங்கி வருவதால் பழைய சீரியல்கள் எல்லாத்தையும் ஓரங்கட்டி வருகிறது. அத்துடன் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தப் போகிறார் என்பதால் மக்கள் அந்தப் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களுடைய கவனத்தை சன் டிவி பக்கம் இழுப்பதற்காக புத்தம் புது சீரியல்களை கொண்டு வரப் போகிறது.

- Advertisement -spot_img

Trending News