வரவர ரொம்ப மொக்கையா போடுறீங்க.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூட போகும் சன் டிவி சீரியல்

ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு பல தரமான சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பி வந்தது. இன்றும் கூட இல்லத்தரசிகள் சன் டிவி சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

ஆனால் தற்போது பல தொலைக்காட்சி சேனல்களும் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதனால் எந்த சேனல் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது என்று பல போட்டிகள் நடக்கின்றன.

இதில் டிஆர்பி யில் மிகவும் குறைவாக இருக்கும் சீரியல்கள் திடீரென்று பாதியில் நிறுத்தப்படும் சம்பவங்களும் நடப்பது உண்டு. தற்போது அதே போன்று ஒரு நிலைமை சன் டிவி சீரியலுக்கு வந்துள்ளது.

சன் டிவியில் மிகவும் பிரபலமாக விளம்பரப்படுத்தப்பட்ட சீரியல் மகராசி. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமி கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரவீனா நடித்தார்.

அதன் பிறகு அவர் அந்த சீரியலை விட்டு விலகி விஜய் டிவிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து அந்த சீரியலில் கதாநாயகியும் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதில் தற்போது நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமான ஸ்ருதிகா நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நன்றாக சென்ற அந்த சீரியல் தற்போது பல குளறுபடிகளால் பார்வையாளர்களை கவர தவறி வருகிறது. தற்போது அந்த சீரியலுக்கு சன் டிவி ஒரு வார்னிங் கொடுத்துள்ளது. அதாவது இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் மகராசி சீரியல் குறைந்தது 3 ரேட்டிங்காவது டிஆர்பி பெற வேண்டும்.

அப்படி பெற தவறி விட்டால் அந்த சீரியல் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கவலை அடைந்த சீரியல் இயக்குனர் தற்போது சீரியலில் விறுவிறுப்பை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படி சீரியலில் சுவாரஸ்யம் இல்லாத பட்சத்தில் மகராசி சீரியல் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்