fbpx
Connect with us

பிரபல காமெடி நடிகரின் கை கால் செயலிழப்பு.. இளம் வயதில் இப்படியா என வருத்தத்தில் ரசிகர்கள்

lokesh-pop-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல காமெடி நடிகரின் கை கால் செயலிழப்பு.. இளம் வயதில் இப்படியா என வருத்தத்தில் ரசிகர்கள்

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தலை காட்டியவர் லோகேஷ் பாப். பிரபல ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் திடீரென இவருக்கு கை கால் செயல் இழந்து விட்டதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது. தற்போது அது உண்மை என்பதை போல அவரது நண்பர்கள் அவரது சிகிச்சைக்காக பணம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

அழகாக இருப்பவர்கள் தான் தொகுப்பாளர்கள் ஆகவேண்டும் என்ற நம்பிக்கையை உடைத்து பிரபல தொகுப்பாளராக வலம் வந்தவர் லோகேஷ் பாப். தற்போது இவரை நிலைமையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

lokesh-pop

lokesh-pop

லோகேஷின் மருத்துவச் செலவுக்கு 6 முதல் 7 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் தரப்பில் சொல்லி விட்டதாக தெரிகிறது. இதனால் தற்போது அவருடைய நண்பர்கள் சிகிச்சைக்காக பணம் சேகரித்து வருகின்றனர்.

என்னதான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தாலும் அவர்களது ஊழியர்களுக்கு மனமிரங்கி உதவி செய்யும் எண்ணம் கூட இல்லையா என மக்கள் கவலைப்பட்டு வருகின்றனர்.

சொல்லமுடியாது, அவர்களும் ஏதாவது உதவி செய்திருக்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top