புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

புது சீரியல் வரிசை கட்டி இருப்பதால் கலாநிதி அதிரடியாக எடுத்த முடிவு.. கயல் சீரியலுக்கு ஏற்பட்ட நிலைமை?

Kayal Serial: சீரியலில் தனிக்காட்டு ராஜாவாக ஜொலித்து வந்த சன் டிவியிடம் போட்டி போடும் விதமாக கடந்த சில வருடங்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சில சேனல்கள் புதுப்புது சீரியல்களை கொண்டு வருகிறார்கள். இதனால் சன் டிவியில் ஏதாவது ஒரு சீரியல் நல்லா இல்லை என்றாலும், உடனே மற்ற சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் பக்கம் மக்கள் திரும்பி விடுகிறார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைக்க சன் டிவி சேனல் அதிக அளவில் மெனக்கெடு செய்து வருகிறது.

அந்த வகையில் எந்த சீரியலில் எல்லாம் கதைகள் இல்லாமல் அரைச்ச மாவே அரைக்கிறார்களோ, அதை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறது. அதனால் தான் வானத்தைப்போல, எதிர்நீச்சல் முடிந்தது போல தற்போது சுந்தரி சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்னொரு சீரியலும் முடிய போகிறது. அதற்கு காரணம் சன் டிவியில் புது சீரியல்களை கொண்டு வருவதற்கு தயாராகி விட்டது.

அம்மாவிற்காக அடங்கிப் போன கயலுக்கு கிடைத்த வெற்றி

அந்த வகையில் தற்போது முடிந்து போன வானத்தைப்போல சீரியலுக்கு பதிலாக மூன்று முடிச்சு என்ற சீரியல் புத்தம் புதுதாக தொடங்கி மக்கள் மனதை ஈர்த்துவிட்டது. இதற்கு அடுத்தபடியாக 900 எபிசோடு கிட்ட நெருங்கிய கயல் சீரியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். இதுவரை யாருக்கும் பணிஞ்சு போகாத துணிச்சலான கயல் தற்போது அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப ஆத்திரத்தை எல்லாம் ஓரமாக ஒதுக்கிவிட்டு எதிரிகளை தன் பக்கம் இழுக்கும் விதமாக போராடி வருகிறார்.

அதனால் வேதவள்ளியை பார்த்து பத்திரிக்கை கொடுத்து முறைப்படி கல்யாணத்துக்கு கூப்பிட போன கயலுக்கு அங்கே ஒரு எதிர்பாராத விதமாக நல்ல விஷயம் அமைந்து விட்டது. திடீரென்று வேதவள்ளிக்கு வந்த நெஞ்சு வலியால் கயல் முதலுதவி செய்து அவர்கள் உயிரையே மீட்டெடுத்து விட்டார். இதனால் வேதவள்ளி கயலின் உண்மையான குணத்தை புரிந்து கொண்டு திருந்தி விட்டார்.

அது மட்டுமில்லாமல் கயலை வில்லியாக பார்த்து எதிரி போல் நினைத்த ராஜேஸ்வரிக்கும் ஒரு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கும் விதமாக ராஜியின் மகள் இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது கயல் காப்பாற்றிய ஒரு தருணத்திற்காக ராஜி, கயலை புரிந்து கொண்டு பாசம் காட்ட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவர்கள் இருவரும் திருந்திய நிலையில் அடுத்து பெரியப்பாவுக்கு அடுத்த பாயசத்தை கிண்டுவதற்கு தயாராகி விட்டார்.

மீதம் இருக்குது பெரியப்பா மற்றும் வடிவு தான் என்பதற்கு ஏற்ப அவர்கள் திருந்துவதற்கும் ஒரு சந்தர்ப்பம் அமையப் போகிறது. இப்படி எல்லாரும் திருந்திய நிலையில் கயல் கல்யாணம் நினைத்தபடி எழிலுடன் நடக்க ஆரம்பமாகப் போகிறது. ஆனால் இதில் எழிலின் அம்மா சிவசங்கரி செய்யும் சதிவேலையில் சிவசங்கரியே சிக்கும் அளவிற்கு ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது. அதையும் கயல் பக்குவமாக டீல் பண்ணி சிவசங்கரி மனதை மாற்றி விடுவார்.

இதனைத் தொடர்ந்து எழில் மற்றும் கயில் கல்யாணம் அனைவரும் எதிர்பார்த்தபடி பிரமாண்டமாக நடந்து முடிய போகிறது. அத்துடன் இந்த கல்யாணத்திலேயே பெரிய பூசணிக்காய் உடைத்து முடித்து விட போகிறார்கள். இதற்கு அடுத்து புத்தம் புது சீரியல் ஆடுகளம் என்ற சீரியல் தயாராகி வருகிறது.

- Advertisement -

Trending News